அசைவ உணவை போன்ற சுவையால் மக்கள் விரும்பி சாப்பிடும் காளான்

காளான் வளர்ப்பு என்பது ஓரு சுயதொழில் வேலைவாய்ப்பு. இது விவசாயி களுக்கு நல்ல லாபத்தை தருகிறது. நாம் நாட்டில் நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப பெருகிவரும் புரதப் பற்றாக்குறை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தினை போக்கிடவும், மக்களின் வாழ்க் கைத தரத்தினை உயா்த்திடவும் ஓரு நல்ல தீர்வாக காளான் வளர்ப்பு அமைகிறது.இன்றைய நாளில் அசைவ உணவினை போன்ற சுவையை காளான் தருவதினால் மக்கள் அதிகம் காளான் வகைகளை விரும்பி உண்ணத் துவங்கி விட்டனர். இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி, கால்சியம், பாஸ் பேட், பொட்டாசியம் மற்றும் காப்பர் போன்ற தாதுச் சத்துக்களும் நிறைந்திரு க்கின்றன. இதில் உள்ள மருத்துவ குணம் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத் துகிறது. காளானில் பட்டன் காளான், பால் காளான் மற்றும் சிப்பி காளான் என பலவகை இருக்கிறது. இதில் சிப்பி காளான் வளர்ப்பது சுலபமானது.

இதுகுறித்து, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங் கிணைப்பாளர் ராஜவேலு கூறுகையில், நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் என சொல்ல கேட்டிருக்கிறோம். மழை பெய்தால் மட்டு மே காளான் முளைக்கும் என்ற நிலை மாறி தற்போது கடும் கோடை காலத்திலும் காளான் வளரும் என்ற நிலை உருவாகியுள்ளது. அன்றெல் லாம் காளானை வளர்த்து சாப்பிட்டவர்கள் அரிது. இன்று காளான் அனைத்து இடங்களிலும் விரும்பி உண்ணும் உணவு வகைகளில் ஒன்றாகிவிட்டது. அன்றெல்லாம் காளானை வளர்த்து சாப்பிட்டவர்கள் அரிது. இன்று காளான் அனைத்து இடங்களிலும் விரும்பி உண்ணும் உணவு வகைகளில் ஒன்றாகி விட்டது. காய்கறிகள், பழங்களைவிட காளானில் அதிக புரதச் சத்து உள்ளது. போலிக் அமிலம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் அதிக அளவில் இருப்பதால் இது ரத்தசோகைக்குச் சிறந்த மருந்து.

நீரிழிவு நோயாளிகள் இதைச் சாப்பிடலாம். உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த நாளங்களின் உட்பரப்பில் கொழுப்பு படிவதை காளான் தடுக்கிறது. காளானில் உள்ள லென்ட்டைசின், எரிட்டி டைனின் போன்ற வேதிப் பொரு ட்கள் ரத்தத்தில் கலந்துள்ள டிரை கிளிசரைடு, பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது. காளானை உணவாக உட்கொள்வதன் மூலம் சத்துப் பற்றாக்குறையை போக்க முடியும். காளான்களில் புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள், தாது உப்பு கள், அமினோ அமிலங்கள் அதிக அளவிலும், கொழுப்பு, மாவுச்சத்துகள் குறைவான அளவிலும் உள்ளன. காளானில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறு போன்றவற்றைப் போக்கும். இதயத்தைப் பாதுகாக்கும்.

காளானில் உள்ள வேதிப்பொருட்கள் ரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பைச் சீர்செய்யும். மூட்டு வாதம் உடையவர்களுக்கு காளான் சிறந்த நிவாரணி. மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்ற வற்றையும் காளான் சரிப்படுத்துகிறது.

தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்றுநோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். 100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டச்சத்தாக அமைகிறது. கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும். வயல்வெளிகள், காடுகளில் தாமாக காளான்களை சேகரித்து உண்போர் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு ராஜவேலு கூறினார்.

இதுகுறித்து இயற்கை உணவு ஆர்வலர் இலக்கியா கூறுகையில், காளான், இது மிகச் சிறந்த ஊட்டச்சத்துள்ள சைவ உணவாகும். இந்தக் காளான்களில் இயற்கையாக விளையக் கூடிய காளான்கள் பல உண்டு என்றாலும் இதில் ஒரு சில காளான்களை மட்டுமே உணவாக உண்ண முடியும். ஆனால் செயற்கையாக விளைவிக்கக் கூடிய காளான்கள் அனைத்தையும் உணவாக உட்கொள்ளலாம். செயற்கையாக விளைவிக்கக் கூடிய காளான்களில் சிப்பிக் காளானும், பால் காளானும் அதிகம் விரும்பி உண்ணக் கூடிய உணவாகும்.

காளானில் வைட்டமின் பி அதிகமாக இருப்பதால் இதயம் சம்பந்தமான நோய்களை குணப்படுத்துகிறது. போலிக் ஆசிட் அதில் இருப்பதால் ரத்த சோகை நோய்க்கு நல்லது. சிறந்த கண்பார்வைக்கும் எலும்புகளின் வளர்ச்சி க்கும் பற்களின் உறுதிக்கும் தேவையான தாமிர, இரும்பு சத்துகளுடன் கூடிய கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற தாதுக்களும் காளானில் உள்ளன. இந்தியாவில் மட்டும் 2 ஆயிரம் வகைக் காளான்கள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. இதில் சிப்பிக் காளான், மொட்டுக் காளான், நாட்டுக் காளான், அரிசிக் காளான் மற்றும் பால் காளான் போன்றவை பயன் பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இயற்கையில் கிடைக்கும் காளான்கள் வகையில், நல்லவை என்று நன்கு தெரிந்த பின்பே உண்ண வேண்டும். காளான் தாய்ப்பாலை வற்ற வைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது. இவ்வாறு இலக்கியா கூறினார்.

Related Stories: