×

குண்டும் குழியுமான கடியாச்சேரி சாலை சீரமைப்பு பணி துவக்கம்

திருத்துறைப்பூண்டி, ஜன. 28: திருத்துறைப்பூண்டி கடியாச்சேரி கிராமத்தில் கடியாச்சேரி முதல் திருவாரூர் செல்லும் சாலை வரை 2 கிமீ தூரம் சாலை உள்ளது. இந்த சாலை பள்ளங்கோயில் கோட்டகம், தானம் தாங்கி,வரம்பியம், மற்றும் வேளுர் வழியாக திருவாரூர் சாலை அடைகிறது. சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலை விவசாய போக்குவரத்து அதிகம் உள்ள சாலை ஆகும். ஆனால் இந்த சாலை ஆம்புலன்ஸ் வாகனம் கூட போக முடியாத சாலையாக உள்ளது. மழைக்காலத்தில் சாலை மிகவும் சேதமடைந்து மாணவர்கள் பளளிக்கு செல்ல இயலாமல் நிலையில் இருக்கிறது. இந்தசாலையை சீரமைக்க சுமார் ரூ.24 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணி தொடங்கப்படாமல் உள்ளது என்று பொதுமக்கள் கோரிக்கை குறித்து தினகரன் நாளிதழில் கடந்த 24ம் தேதி செய்தி படத்துடன் வெளியானது. அதன் எதிரொலியாக சாலை பணி நேற்று முன்தினம் முதல் துவங்கி உள்ளது. இதற்கு தினகரன் நாளிதழுக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர். மேலும் இந்த சாலையில் உள்ள அரசு திறந்த வெளி சேமிப்பு கிடங்கிற்கு நெல் மூட்டைகளை ஏற்றி வரும் லாரிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள்க கலெக்டர் மற்றும் தமிழ் நுகர்பொருள் வானிபகழக முதுநிலை மண்டல மேலாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Commencement ,road ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...