×

நீடாமங்கலம் ஒன்றியத்தில் 44 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்

நீடாமங்கலம்.ஜன.28: நீடாமங்கலம் ஒன்றியத்தில் 44 ஊராட்சிகளிலும் கிராம சபா கூட்டம் அந்தந்த ஊராட்சி தலைவர் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. நீடாமங்கலம் அருகில் உள்ள பரப்பனாமேடு ஊராட்சியில் அதன் தலைவர் கைலாசம் தலைமையில் கிராம சபா கூட்டம் நடந்தது.ஆணையர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக ஒன்றியகுழு தலைவர் செந்தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். வீட்டிற்குவீடு கழிவறை கட்டுவது,புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளில் கட்டாய மழைநீர் சேமிப்பு தொட்டி அமைக்க வேண்டும்,உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைத்தலைவர் சுசித்திரா உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர். பொதக்குடி ஊராட்சியில் அதன் தலைவர் மல்லிகாபிச்சையன் தலைமையில் கிராமசபா கூட்டம் நடந்தது .கூட்டத்தில் தமுமுக கிளை தலைவர் சாகுல்அமீது தலைமையில் இந்நிய குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறவேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மனு கொடுக்கப்ட்டது மனுவை பெற்றுக்கொண்டனர்.பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.மேலாளவந்தசேரி ஊராட்சியில் ஷீலாமதிவாணன் தலைமையில் கிராமசபா
கூட்டம் நடந்தது.

Tags : Sabha ,meeting ,Needamangalam Union ,
× RELATED 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் புது...