பொதுமக்கள் அவதி குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி இஸ்லாமிய கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

பாபநாசம், ஜன. 28: பாபநாசம் அண்ணா சிலை அருகே வட்டார அனைத்து இஸ்லாமிய மஹல்லா ஜமாஅத் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் இலங்கை தமிழர்கள், இஸ்லாமியர்கள் குடியுரிமையை பறிக்கும் குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம், திமுக மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில கொள்கை பரப்பு செயலாளர் காயல் மஹபூப், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் மனோகரன், ஒன்றிய செயலாளர் காதர் உசேன், பெரியார் திராவிட கழக எழுத்தாளர் மணிமாறன், அமமுக பேச்சாளர் பரணி கண்டன உரையாற்றினர்.

Advertising
Advertising

சமுதாய நல்லிணக்க பேரவை தலைவர் முபாரக், திமுக மாவட்ட துணை செயலாளர் அய்யாராசு, பொருளாளர் ஷேக் தாவூது, பாபநாசம் ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன், பாபநாசம் பேரூர் செயலாளர் கபிலன், ஒன்றியக்குழு உறுப்பினர் விஜயன், காசுமியா ஜமாலியா சமூக மேம்பாட்டு அமைப்பு முபாரக், சிக்கந்தர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகி கமாலுதீன் பைஜி, இந்திய கம்யூனிஸ்ட் நவநீதகிருஷ்ணன், சக்கராப்பள்ளி ஊராட்சி தலைவர் நாசர், முன்னாள் ராஜகிரி ஊராட்சி தலைவர் ஷேக் தாவூது, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் காசிம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: