திங்களுர் சந்திரன் கோயிலில் குடியரசு தினவிழா கிராமசபை கூட்டம்

திருவையாறு, ஜன. 28: திருவையாறு அடுத்த திங்களுர் சந்திரன் கோயில் வளாகத்தில் கிராமசபை கூட்டம் நடந்தது. ராயம்பேட்டை ஊராட்சி தலைவர் விஜயகுமாரி வெங்கடாஜலம் தலைமை வகித்தார். திருவையாறு மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதியும், நீதித்துறை நடுவர் கூடுதல் முழு பெறுப்பு மற்றும் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவருமான தனசேகரன் பங்கேற்று இலவச சட்ட உதவி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வழக்கு தாக்கல் செய்தவரோ அல்லது எதிர்வழக்கு செய்பவரோ, சட்டபடி சட்ட உதவிகள் பெற தகுதியானவர்கள் என்றார். மேலும் குடும்ப வழக்குகள், சிவில் வழக்குகள், வங்கி கடன் சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் பிரச்னைகள் போன்ற 10 அம்சங்கள் குறித்து எடுத்து கூறினார்.

கூட்டத்தில் மழைநீர் சேகரிப்பு, குடிமராமத்து, பிளாஸ்டிக் தடை, குடிநீரை சுத்தமாக வைத்தல், டெங்கு காய்ச்சல் தடுப்பு போன்ற 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக ஊராட்சி செயலாளர் அமலதாஸ் விக்டர் வரவேற்றார். ராசபையில் வக்கீல் முருகராஜ், ஊராட்சி துணைத்தலைவர் கமலம் மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். திருவையாறு வட்ட சட்டப்பணிகுழு இளநிலை உதவியாளர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.திருவையாறு ஒன்றியத்தில் 40 ஊராட்சிகளிலும் அந்தந்த ஊராட்சி தலைவர் தலைமையில் கிராமசபை கூட்டங்கள் நடந்தது. ஊராட்சி செயலாளர்கள் தீர்மானங்களை வாசித்தார்.; கூட்டத்தில மழைநீர் சேகரிப்பு, குடிமராமத்து, பிளாஸ்டிக் தடை, குடிநீரை சுத்தமாக வைத்தல், டெங்கு காய்ச்சல் தடுப்பு உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: