×

நெற்பழ நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

புதுக்கோட்டை, ஜன.28: புதுக்கோட்டை மாவட்டத்தில் நெற் பயிரில் அதிகரித்து வரும் நெற்பழ நோய். வேளாண் மைத்துறை இணை இயக் குநர்நேரில்ஆய்வு செய்து நோயைக் கட்டுப்படுத்த ஆலோசனை வழங்கியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில், சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் வயல்களில் நெற்பழ நோய் தாக்குதல் குறித்து, வேளாண்மை இணை இயக்குநர் கணேசன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: நெற்பழ நோய் பூஞ்சாண த்தால் உருவாகும். இந்த நெற்பழ நோயானது நெற் பயிரின் பூக்கும் தருணத்திலும், கதிர் வெளிவரும் சமயத்திலும் மிகுந்து காணப்படும்.20முதல் 25டிகிரி செல்சியஸ் கொண்ட குறைந்த வெப்பநிலை, 90 சதவீதத்துக்கும் அதிகமான ஈரப்பதம், இரவுநேர பனி ஆகிய வை இந்நோய் தாக்குதலுக்கு ஏற்ற காலநிலையாகு ம்.

நெற்பழ நோய் பரவும் விதம் :
வேகமான காற்றுவீசும்போது ஒருபயிரிலிருந்து மற்ற பயிர்களுக்கு பூசண வித்துக்கள் எளிதாகப்பரவும். இந் நோய் பாதிப்புக்குள்ளான விதைகள், காற்று, மண் மற் றும் நீர் மூலமாக பரவுகிறது. இந்த நோயின் பூஞ்சாண வித்துக்களால் ஒரு வய லிலிருந்து மற்ற வயல்களுக்கும் எளிதாகப் பரவும். நோயின் அறிகுறிகள் :இந்நோயின் தாக்குதலுக்கு உள்ளாகும் ஒவ்வொரு நெற்கதிர் மணிகளும் பூச ணத்தின் வித்துக்களால் நிரம்பி பளபளப்பான சிறி ய பந்து போன்று காட்சிய ளிக்கும்.
இந்த பூஞ்சாணப் பந்தானது முதலில் ஆரஞ்சு நிறமாகவும், பிறகு மஞ்சளும் பச்சைநிறமும் அல்லது பச்சையும் கருப்பு நிறமுமாக மாறிக் காணப்படும். முதலில் ஒருகதிரில் ஒரு சில மணிகளே நெற்பழ நோய்த் தாக்குதலுக்கு உள் ளாகும்.நெற்பழ நோய்த்தா க்குதல் மிகுந்து காணப்படு ம்போது கதிரில் உள்ள அ னைத்து மணிகளுமே பாதிப்புக்கு உள்ளாகும். இதனா ல், நெல் மணிகளின் தரம் குறைந்துவிடும்.எனவே, இ. ந் நோய் பாதிப்புக்குள்ளா ன வயல்களிலிருந்து நெல் மணிகளை விதைக்காக பயன்படுத்தக்கூடாது.

நெற்பழ நோய் மேலாண்மை:
நெல் நாற்று விடுவதற்கு இந்நோய் தாக்காத விதை களை மட்டுமே பயன்படுத் த வேண்டும்.மேலும், விதை களை கார்பன்டாக்சின் என்ற பூஞ்சாண கொல்லி மருந்தினை கிலோவிற்கு 2 கிராம் வீதம் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். வயல் மற்றும் அதனை ச் சுற்றியுள்ள பகுதிகளில் களைச் செடிகள் இல்லாம ல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அதிக அள வில் தழைச்சத்து உரங்கள் இடுவதைத் தவிர்த்தல் வேண்டும். இந்நோயானது கா ற்றின் மூலம் பரவுவதால் தாக்கப்பட்ட கதிர்களை வயலில் இருந்து அப்புறப்படு த்தி அழித்துவிட வேண்டு ம். குளிர் காலங்களில் நோ ய் தாக்குதலை முறையாக கண்காணிக்க வேண்டும். நெற்பழ நோய் தாக்குதலிலிருந்து நெற்பயிரைப் பாதுகாக்க கலப்பு கதிர்வெளி வரும்போது ஒரு முறையும், பால் பிடிக்கும் தருவாயில் ஒரு முறையும் ஓரு ஏக்கரு க்கு புரோபிகோனசோல் 25ஈசி - 200 மி.லி அல்லது காப்பர் ஆக்சிகுளோரை டு-77 டபிள்யூ.பி-500 கிராம் இவற்றில் ஏதாவது ஒரு மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் மாலை வே ளைகளில் தெளிக்க வேண்டும். இந்நோயின் தாக்குதல் அதிகமாக காணப்படின் 15 நாள்கள் கழித்து மீண்டும் ஒருமுறை மேற்கூறிய மரு ந்தினை தெளித்து இந்நோ யைக் கட்டுப்படுத்தலாம். அறுவடைக்குப்பிறகு வைக் கோல் மற்றும் பயிர் தூர்களை நன்கு மண்ணில் அமி ழ்த்தி உழுதுவிட வேண்டும். இதன் மூலம் அடுத்த சாகுபடியில் இந்நோயின் தாக்குதல் இல்லாமல் நெற் பயிரைப் பாதுகாக்க முடியு ம் என்று வேளாண்மைத் துறை இணைஇயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பி ல் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED வெப்பம் அதிகரிப்பு காரணமாக பொன்னமராவதி முக்கிய சாலைகள் வெறிச்சோடியது