×

பிரதிநிதிகளுக்கு நீதிபதி அறிவுரை விபத்து வழக்கில் நீண்ட காலமாக தீர்வு கிடைக்காததால் விரக்தி

பெரம்பலூர்,ஜன.28:பாதுகாப்புப் போலீசாருக்குத் தெரியாமல் பெட்ரோல் பாட்டிலை மறைத்து எடு த்துவந்து கலெக்டர் அலு வலக குறை தீர்க்கும் கூட்ட அரங்கிற்குள் மாவட்ட வருவாய் அலுவலர் முன் னிலையில் ஆட்டோ டிரை வர் விபத்து வழக்கில் நீண்டகாலமாக தீர்வு கிட்டாததால் விரக்தி யில் விபரீத முயற்சியில் ஈடுபட்டார். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, தேவையூர் ஊராட்சி, ரஞ் சன் குடி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி மகன் அருள்செல்வம் (28).ஆட்டோ டிரைவரான இவ ருக்குத் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு, அருள் செல்வம் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வாலி கண்டபுரம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென் று கொண்டிருந்தபோது, அரசு டவுன் பஸ் மோதிய விபத்தில், கால் நசுங்கி சிதைந்து படுகாயமடைந் தார். மங்களமேடு போலீ சார் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கு பெரம் பலூர் சார்பு நீதிமன்றத் தில் நடந்து வருகிறது.இரண்டரை வருடங்களு க்கு மேலாகியும் விசார ணை முடிந்த பாடில்லை.

அதனால் வழக்கின் நிலை அறிய கடந்த செப்டம்பர் மாதம் 13ம்தேதி, பெரம்ப லூர் மாவட்ட ஒருங்கிணை ந்த நீதிமன்ற வளாகத்திற் குத் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வந்த அருள் செல்வம், நீதிமன்ற ஊழியரிடம் கேட்டபோது, வழக்கு விசாரணை நடத்தப்படும் சம்பந்தப்பட்ட நீதி மன்றத்தில் நீதிபதி பணி யிடம் காலியாக உள்ள தால், வழக்கு விசாரணை தாமதமாகி வருவதாக கூறியுள்ளார். இதனால் தனக்கு எப்போது தீர்ப்பு கிடைத்து, இழப்பீட்டுத் தொகை தருவார்களோ, அதுவரை வேறு எந்த பிழைப்புக்கும் செல்லமுடி யாதே என நினைத்து நீதி மன்ற வளாகத்திலேயே தீக்குளிக்கப் போவதாக தெரிவித்த அருள் செல் வத்தை, கலெக்டர் அலுவ லகத்தில் சென்று முறையி டுமாறு நீதிமன்ற ஊழியர் நாசுக்காக பேசி அனுப்பி வைத்ததால், அன்று கா லை கலெக்டர் அலுவலகத் திற்கு வந்து மனைவி குழ ந்தைகளுடன் தீக்குளிக்க முற்பட்டார்.

அப்போது உஷாராக இருந்த பாதுகா ப்பு போலீசார் பெட்ரோல் பாட்டிலை பிடுங்கிக் கொ ண்டு தீக்குளிப்பைத் தடு த்து நிறுத்தியதோடு, நம்பி க்கை வார்த்தைகள் சொல் லி அனுப்பி வைத்தனர். இருந்தும் மாவட்ட நிர்வா கமோ, காவல்துறையோ, நீதிமன்றமோ, சம்மந்தப்ப ட்ட அரசுப் போக்கு வரத்துக் கழகமோ, டவுன் பஸ் டயருக்கு அடியில் கால்சிக்கி நசுங்கி, நடக்கவே முடியாமல் வாழ்க்கையே முடங்கிப் போன அருள் செல்வத்திற்கு உதவ முன்வரவில்லை. இதற்காக கடந்த 2வாரத்திற்கு முன்பு கலெக்டர் அலுவலகத்திற்கு மனைவியுடன் வந்து மனுகொடுத்த போதும், அந்த அதிகாரியைப் போய்ப்பார், இந்த அதிகாரியைப் போய் பார் என அலைகழிக்கப் பட்டாரே தவிர, தீர்வுக்கான வழியை யாருமே சொல்லவில்லை.

இந்நிலையில் நேற்று அருள்செல்வம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்ட த்திற்குத் தனது மனைவி மற்றும் தாய் ஆகியோரு டன் வந்திருந்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற அந்தக் குறை தீர்க்கும் கூட்ட அரங்கிற்குள் சென்று மனுவைக் கொடுத்த அருள்செல்வம், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் கூடி யிருந்த கூட்ட அரங்கின் நடுவிலே, யாரும் எதிர்பா ராத நிலையில், திடீரென மறைத்து வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை எடுத் துத் திறந்து உடம்பில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முற்பட்டார்.இதனால்அனை த்து அலுவலர்களும் அதிர்ச்சி அடைந்து எழுந்து நின்றனர். உடனே சிலர் ஓடிவந் து அருள் செல்வத்தை சுற் றி நின்று பிடித்துக் கொண் டனர். பிறகு போலீசாரை உள்ளே வரவழைத்து வெ ளியே அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க உதவும் படி கேட்டுக் கொண்டனர். கலெக்டர் அலுவலக குறை தீர்க்கும் கூட்டஅரங்கில் யாரும் எதிர்பாராமல் நடந் த இந்த சம்பவத்தால் கூட்ட ம் முடியும் வரை அலுவலர் கள் அனைவருக்கும் அதிர் ச்சியும் படபடப்பும் அடங்கா தி ருந்தது குறிப்பிடத்தக்க து.

கலெக்டரை மாற்றுங்கள்...
பின்னர் போலீஸ் பாதுகா ப்புடன் வெளியேஅழைத்து வரப்பட்ட அருள் செல்வம், கதறிஅழுதபடி தெரிவித்த தாவது: பலமாதங்கள் நீதிபதி இல் லை எனச் சொன்னார்கள். காவல் நிலையத்தில் போ ய் கேட்டால், எதிர் மனு தாக் கல் செய்ய அரசு போக்கு வரத் துக்கழகம் முன்வர வில்லை என்றார்கள், கலெக்டர் அலுவலகத்திற்கு வந் துகேட்டால் அவரைப் போய் பாருங்கள், இவரைப் போய் பாருங்கள் எனக்கூறி அ லை கழிக்கிறார்கள். ம னைவி, 2 பிள்ளைகளோடு வாழும் என்னால் எந்த வேலைக்கும் போக முடியாமல் எப்படி சோறு போட முடியும். இழப்பீட்டுத் தொகையும் பெற்றுத் தராமல் இழுத் தடிக்கிறாரார்கள். இனி என்னால் என்னசெய்ய முடியும்.அதனால் தான் வே றுவழியின்றி குடும்பத்து டன் சாகத் துணிந்து இங்கு வந்தேன். இதேநிலை நீடித் தால் எனக்கு எந்தத் தீர்வும் கிடைக்காது. அதற்கு கலெ க்டரை மாற்றினால் தான் எனக்கு தீர்வு கிடைக்கும் எனக்கூறி கதறிஅழுதார். பின்னர் அவரிடம் போலீ சார் காத்திருங்கள் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம் பிக்கை வார்த்தை கூறி ஊ ருக்கு அனுப்பி வைத்தனர்.

கோட்டைவிடும் போலீசார்...
கலெக்டர் அலுவலக குறை தீர்க்கும் கூட்டத்திற்கு வரு வோர்  தங்கள் கோரிக்கை கள் நிறைவேற்றப் படாமல், மாதக்க ணக்கில் வருடக்க ணக்கில் இழுத்தடிக்கப்படு வதாலும், காவல்நிலையங் களில் தீர்வு கிடைக்காததா லும் இதுபோன்ற தற்கொ லை முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தடுக்க ஒவ்வொரு குறை தீர்க்கும் கூட்டத்திற்கும் போலீசார் குவிக்கப்பட்டு, பைகளை பரிசோதித்து அனுப்பினாலும், போலீ சாருக்கு டிமிக்கி கொடுத் துவிட்டு, மாதம் ஒருவரா வது கலெக்டர் அலுவல கத்தில் தீக்குளிக்க முற்படு வது அரசுத்துறை அலுவ லர்கள் மத்தியிலும், மனு தாரர்கள் மத்தியிலும் மிகு ந்த அதிர்ச்சியை ஏற்படுத் தி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : judge ,deputies ,accident ,
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...