குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து ஜமாத் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

கெங்கவல்லி,  ஜன.28: கெங்கவல்லியில், வட்டார அனைத்து இஸ்லாமியர் ஜமாத் கூட்டமைப்பு சார்பில்  குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்று கோஷங்களை எழுப்பினர்.

கெங்கவல்லி தாலுகாவில் கெங்கவல்லி வட்டார அனைத்து  இஸ்லாமியர் ஜமாத் கூட்டமைப்பு, திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்தும், திரும்ப பெற கோரியும் கெங்கவல்லி தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கெங்கவல்லி வடக்கு பள்ளிவாசல் துணை முத்தவல்லி இலாஹி(எ)  கண்ணப்பன் தலைமை வகித்தார். இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்  இந்தியா மாநிலச் செயலாளர் முகமது பாய்ஸ், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்  மாநில பொதுச்செயலாளர் ஆபிரூதீன் மன்பயி, மாவட்ட  பொதுச்செயலாளர் சையத் அலி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி துணை செயலாளர் கருப்பையா, நகர காங்கிரஸ் நிர்வாகிகள் ஷரிப் பாட்ஷா, முருகானந்தம், வணிகர்  சங்கத் தலைவர் ஆண்ட்ரூஸ் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர். முன்னதாக கெங்கவல்லி கடைவீதி உள்ளிட்ட பகுதியில் 200 மீ., நீளமுள்ள தேசியக்கொடியை நூற்றுக்கும் மேற்பட்டோர் கைகளில் ஏந்தியவாறு ஊர்வலமாக வந்தனர்.

Related Stories: