பட்டா மாறுதலுக்கு ₹6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ.,வுக்கு 2 ஆண்டு சிறை

சேலம், ஜன.28: சேலம் அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு சேலம் நீதிமன்றம் 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.சேலம் மாவட்டம், ஓமலூர் ஏலத்தூரை சேர்ந்தவர் விஜயராகவன். இவர் பெரியவடகம்பட்டியில் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2009ம் ஆண்டு ஓமலூர் அருகேயுள்ள நடுப்பட்டி நிலம் வாங்கினார். அந்த நிலத்திற்கான பட்டாவை மாற்ற விஜயராகவன், நடுப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசனிடம் முறையிட்டார். பட்டா மாறுதலுக்கு விஜயராகவனிடம், வெங்கடேசன் ₹ 6 ஆயிரம் லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விருப்ப இல்லாத விஜயராகவன், இது குறித்து அவர் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். லஞ்சம் ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை விஜயராகவனிடம் கொடுத்தனர். அப்போது விஜயராகவன், விஏஓ வெங்கடேசனிடம் ₹6 ஆயிரம் பணம் வாங்கியபோது மறைந்து இருந்த போலீசார் அவரை கை, களவுமாக பிடித்தனர்.பின்னர், லஞ்ச ஒழிப்பு போலீசார் வெங்கடேசனை கைது செய்து, 2011ம் ஆண்டு ஜனவரியில் வழக்குப்பதிவு செய்தனர். இது சம்பந்தமான வழக்கு, சேலம் ஊழல் தடுப்பு கண்காணிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுகந்தி, லஞ்சம் வாங்கி வெங்கடேசனுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனையும், ₹15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Tags : VAO ,strap change ,prison ,
× RELATED பெருமாட்டுநல்லூரில் பூட்டியே கிடக்கும் விஏஓ அலுவலகம்