முன்னாள் மாணவர்கள் சார்பில் அரசு பள்ளிக்கு இலவச கம்ப்யூட்டர்

ஆட்டையாம்பட்டி, ஜன.28: ஆட்டையாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் ஏழை- எளிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக ₹14 ஆயிரம் மதிப்பிலான கம்ப்யூட்டரை சேலம் சாப்ட்வேர் இன்ஜினியரிங் நண்பர்கள் இலவசமாக வழங்கினர். சேலம்  இன்ஜினியரிங் குரூப்பில் 10க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தில் பிறந்து படித்து முன்னுக்கு வந்துள்ள இவர்கள், கடந்த நான்கு ஆண்டுகளாக அரசு பள்ளிகளின் தேவைகளை அறிந்து  முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். இதில் தாங்கள் படித்து வந்த ஆட்டையாம்பட்டி  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயராகவன் மற்றும்  உதவித் தலைமை ஆசிரியர் மணிகண்டன் மூலம் குடியரசு தினவிழாவை முன்னிட்டு ₹14 ஆயிரம் மதிப்பிலான கம்ப்யூட்டரை பள்ளிக்கு வழங்கினர்.

Tags : Government School ,Alumni ,
× RELATED ஏலாக்குறிச்சி அரசு பள்ளியில் மூலிகை கண்காட்சி