சோனா கல்லூரி மைதானத்தில் திருப்பதி நிவாச திருக்கல்யாணம்

சேலம், ஜன.28: சேலம் ஸ்ரீஸ்ரீநிவாச திருக்கல்யாண கமிட்டி செயலாளர் கார்த்திகேயன் நிருபர்களிடம் கூறியது: திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில்,  ஸ்ரீநிவாச திருக்கல்யாண விழா,  சேலம் சோனா கல்லூரி மைதானத்தில் வரும் 9  தேதி மாலை 4 மணி முதல் 8 மணி வரை வெகு சிறப்பாக நடக்கிறது. இதை சோனா கல்விக் குழுமமும், திருக்கல்யாண கமிட்டியும் இணைந்து நடத்துகிறது. சேலத்தில், சோனா கல்விக் குழுமத்தின் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி, சோனா கல்லூரிகளின் மைதானத்தில் கடந்த 2006, 2009 மற்றும் 2014ம் ஆண்டுகளில் வெகு சிறப்பாக நடைபெற்ற. திருக்கல்யாண வைபவத்தை சேலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மூன்று லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் கண்டு இறையருள் பெற்றனர்.

நடப்பாண்டு வரும் பிப்ரவரி  8ம்தேதி (சனிக்கிழமை) இரவு திருக்கல்யாணம் நடக்கிறது. திருப்பதி தேவஸ்தான அர்ச்சகர்கள் உள்ளிட்ட சுமார் 50 பேருடன் ஸ்ரீஸ்ரீநிவாச உற்சவ மூர்த்தி, தாயார்களுடன் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி, சோனா கல்லூரி வளாகத்தில் எழுந்தருள இருக்கிறார். இத்திருக்கல்யாண வைபவத்தை காண்பதற்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் சிறப்பான முறையில் திருக்கல்யாண வைபவத்தை கண்டு மகிழ சோனா கல்விக் குழுமமும், திருக்கல்யாண கமிட்டியாரும் தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நடும் விழா மற்றும் மஞ்சள் இடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ ஸ்ரீநிவாச திருக்கல்யாண கமிட்டித் தலைவர் வள்ளியப்பா, செயலாளர் அர்த்தனாரி மற்றும் பொருளாளர் சுப்ரமணியன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இவ்வாறு கார்த்திகேயன் கூறினார்.

Related Stories: