×

மனு அளிக்க வந்தவர்களிடம் போலீசார் ஹெல்மெட் கெடுபிடி

நாமக்கல், ஜன.28: நாமக்கல்லில் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்த பொதுமக்களிடம் ஹெல்மெட் அணிந்து வரச்சொல்லி போலீசார் கெடுபிடி காட்டியதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் மனு அளிக்க வந்தனர்.தற்கொலை முயற்சி மற்றும் நூதன முறையில் மனு அளிக்க வரும் மக்களை தடுத்து நிறுத்த கலெக்டர் அலுவலக மெயின்கேட்டில் நல்லிபாளையம் போலீசார் திங்கள்கிழமை அதிக எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டு கண்காணிப்பது வழக்கம். இந்நிலையில், நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு டூவீலரில் மனு அளிக்க வந்த மக்களை, ஹெல்மெட் விழிப்புணர்வு என போலீசார் தடுத்து நிறுத்தினர். ஹெல்மெட் அணிந்து வந்தால் தான் உள்ளே அனுமதிக்கமுடியும் என கட்டாயப்படுத்தினர். இதனால், மனு அளிக்க வந்தவர்கள் உள்ளே செல்ல முடியாததால், பின்னர் வாகனங்களை வெளியே நிறுத்திவிட்டு உள்ளே நடந்து சென்றனர். சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் விழிப்புணர்வை ஏற்படுத்தாமல், மனு அளிக்க வரும் பொதுமக்களிடம் போலீசார் கெடுபிடி காட்டியது பலரையும் எரிச்சல் அடைய செய்தது. ஆனால், அரசு வாகனங்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிந்து செல்லாததை போலீசார் கண்காணிக்கவில்லை. பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வரும் வாகனங்களை மறித்து சீட் பெல்ட் அணிந்து செல்லும் படி கட்டாயப்படுத்தியதால், கடும் சிரமமடைந்தனர்.

Tags :
× RELATED மது விற்ற 8 பேர் கைது