×

கோட்டைக்காடு பகுதியில் குப்பை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசு

பள்ளிபாளையம், ஜன.28: கோட்டைக்காடு பகுதியில் குப்பை அகற்றப்படாமல் கிடப்பதால் இதை தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. பள்ளிபாளையம் கோட்டைகாடு பகுதியில் மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள குப்பைகளை, நகராட்சி குப்பை கிடங்கிற்கு எதிரே சாலையோரம் கொட்டிவிட்டு செல்கின்றனர். இது நாள் வரை உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால், இங்கு கொட்டப்படும் குப்பைகள் அகற்றப்படவில்லை. தற்போது புதிய பிரதிநிதிகள் பொறுப்பேற்ற பிறகும் இதே நிலை நீடிக்கிறது. குப்பைகள் காய்ந்ததும், மர்ம நபர்கள் சிலர் அதில் தீ வைத்துச்செல்கின்றனர். எரியும் குப்பையிலிருந்து பரவும் புகையால், அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுகாதாரம் கெடுகிறது. சுவாசிக்கும் காற்று மாசடைந்து, பொதுமக்களுக்கு பல்வேறு நோய்களை ஏற்படுத்துகிறது. இந்த குப்பையை உடனுக்குடன் அகற்றப்பட வேண்டும். அல்லது எதிரே உள்ள நகராட்சி குப்பை கிடங்கின் முன்பு, தொட்டி வைத்து அதில் சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடந்த இரண்டு நாட்களாக இந்த குப்பைகள் தொடர்ந்து எரிந்ததால், சுகாதார கேடு ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் குமாரபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து அணைத்தனர்.

Tags :
× RELATED வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்