×

நலச்சங்க நிர்வாகிகள் மனு வெறிநாய்களிடம் இருந்து ஆடுகளை காக்க வேண்டும்

கரூர், ஜன. 28: வெறிநாய்களிடம் இருந்து ஆடுகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆத்தூர் பூலாம்பாளையம் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சி பொதுமக்கள் அளித்த மனுவில், ஆத்தூர் பெரிய வடுகபட்டியில் வெறிநாய்தொல்லை அதிகமாக இருக்கிறது. கடந்த 13ம், 25ம் தேதிகளில் 30க்கும் மேற்பட்ட செம்மறியாடுகளை வெறிநாய்கள் கடித்துள்ளது. வெறிநாய் கடியில் இருந்து ஆடுகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். கிருஷ்ணராயபுரம் தாலுகா பாலாஜபுரம் வீராக்கியம், விவசாயிகள் பொதுமக்கள் அளித்த மனுவில், பாலராஜபுரம் கிராமம் முழுவதும் சுமார் 1500 ஏக்கர் பரப்பரளவில் நெல் சாகுபடி செய்துள்ளோம். நெல்லுக்கு வெளி மார்க்கெட் விலையை விட விலை குறைவாகவே கிடைக்கிறது. எனவே அரசே வீரராக்கியத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

Tags : Welfare managers ,
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு