×

குளித்தலை இரும்பூதிபட்டியில் ரேக்ளா பந்தயம் கும்பகோணத்தை சேர்ந்த குதிரைக்கு முதல் பரிசு

குளித்தலை, ஜன. 28: குளித்தலை அடுத்த இரும்பூதிபட்டியில் நடந்த ரேக்ளா பந்தயத்தில் கும்பகோணத்தை சேர்ந்த குதிரைக்கு முதல் பரிசு கிடைத்தது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இரும்பூதிப்பட்டியில் முத்தரையர் இளைஞரணி சார்பில் 11ம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா மற்றும் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இதில் திருச்சி, கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். ஒத்தைமாடு போட்டியில் முதல் பரிசு கோவை சுந்தரமகாலிங்கம் ராதாகிருஷ்ணன், இரண்டாம் பரிசு எஸ்.என்.நிதர்சன், மூன்றாம் பரிசு வானவில் வாலிபர்கள் பெற்றனர். இரட்டைமாடு போட்டியில் முதல் பரிசு திருப்பூந்துருத்தி ஆனந்த் அய்யனார், இரண்டாம் பரிசு திருச்சி கிளியூர் நாராயணசாமி, மூன்றாம் பரிசு திருவையாறு தியாகராஜன் பெற்றனர்.

பெரிய குதிரை போட்டியில் முதல் பரிசு கும்பகோணம் மன்னார்சாமி, இரண்டாம் பரிசு கொல்லாபுரம் நஸ்ருதீன்பாய், மூன்றாம் பரிசு கோவை அன்னூர் மூர்த்தி பெற்றனா;. சிறிய குதிரை போட்டியில் முதல் பரிசு ஆத்தூர் ஏவிஎம் புரூட் பைலட்குண்டு, இரண்டாம் பரிசு ரங்கம் சந்தோஷ், மூன்றாம் பரிசு சாக்கோட்டை முரளி பெற்றனர். சிறியமாடு போட்டியில் முதல் பரிசு சேலம் ராஜா குரூப்ஸ் சின்னு, இரண்டாம் பரிசு சேலம் ராஜ் குரூப்ஸ் ரவி, மூன்றாம் பரிசு சேலம் சிவா பெற்றனர். ஆண்களுக்கான கட்டபிட்டிங் சைக்கிள் போட்டியில் முதல் பரிசு கார்த்திகைப்பட்டி பார்த்திபன், இரண்டாம் பரிசு திருமேனியூர் நாகராஜன், மூன்றாம் பரிசு மேட்டுமகாதானபுரம் மனோஜ்குமார் பெற்றனர். 1500 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் முதல் பரிசு ஆரியம்பட்டி மதுபாலன், இரண்டாம் பரிசு திருவையாறு யோகேஷ், மூன்றாம் பரிசு முத்து ஆகியோர் பெற்றனர்.

Tags : bathing iron house ,Kumbakonam ,
× RELATED கும்பகோணம் ஆதிவராகப்பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர தெப்போற்சவம்