×

கரூரில் நடந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கரூர், ஜன. 28: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் முதியோர், விதவை, கணவனால் கைவிடப்பட்டோர், மற்றுறுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனை, வேலைவாய்ப்பு, காவல்துறை நடவடிக்கை புதிய குடும்பஅட்டை, கல்விக்கடன், தொழில்கடன், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 205 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். முதல்வரின் தனிப்பிரிவு, பல்வேறு முகாம்களில் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களின் மீது காலதாமதம் இன்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, நலவாரியத்தின் சார்பில் பிரசவ உதவித்தொகை, கல்வி, விபத்து மரணம், இயற்கை மரணம், ஈமச்சடங்கு உதவித்தொகையாக 18 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.68 லட்சம் மதிப்பிலான காசோலைகள் இணை இயக்குனர் மூலம், தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற 20 மாணவிகளுக்கு பரிசு பாராட்டு சான்றிதழ் கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொ)செல்வசுரபி, மருத்துவ இணை இயக்குனர் பாக்கியலட்சுமி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மகேஷ்வரி, சமூகபாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் பாலசுப்பிரமணியன், கலார் உதவி ஆணையர் மீனாட்சி, ஆதிதிராவிட நல அலுவலர் லீலாவதி, மாற்றத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Karur ,Grievance Redressal Meeting ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...