×

அஞ்செட்டி பகுதியில் ₹1 கோடியில் சாலை பணி துவக்கம்

தேன்கனிக்கோட்டை, ஜன.28: அஞ்செட்டி பகுதியில் ₹1 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணியை பிரகாஷ் எம்எல்ஏ துவக்கி வைத்தார். அஞ்செட்டி தாலுகா உரிகம் சாலை முதல் முனியப்பன்தொட்டி வரை, ₹54 லட்சம் மதிப்பில் தார் சாலை, உரிகம் ஊராட்சி துவக்கப்பள்ளிக்கு ₹16 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர், கோட்டையூர் ஊராட்சி நாயக்கன்கொட்டை முதல் தாண்டியம் வரை ₹10 லட்சம் மதிப்பில் தார் சாலை புதுப்பித்தல் பணி, உரிகம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ₹8லட்சம் மதிப்பில் பேவர்பிளக் பதித்தல், மஞ்சுகொண்டபள்ளி ஊராட்சி பேல்பட்டி முதல் ஆனந்திபுரம் வரை ₹14 லட்சம் மதிப்பில் தார் சாலை  அமைக்கும் பணி என சுமார் ₹1 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணிகளை பிரகாஷ் எம்எல்ஏ பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், தளி ஒன்றிய சேர்மேன் சீனிவாசலுரெட்டி, தெற்கு ஒன்றிய செயலாளர் திவாகர், அஞ்செட்டி ஒன்றிய பொறுப்பாளர் நாகன், அவைத்தலைவர்கள் நாகராஜ், கிரிஸ், மாவட்ட கவுன்சிலர் மஞ்சுநாத், ஒன்றிய கவுன்சிலர்கள் சிவராஜ், வெங்கடேஷ், சண்முகம், கங்கப்பா, அரிஷ், ரங்கராஜ், சிவங்கிரி, சித்தப்பா, ஒன்னி, பசப்பா, மூர்த்தி, நூரெந்தப்பா, சிவகுமார், கிருஷ்ணமூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : area ,Anjetti ,
× RELATED வாட்டி வதைக்கும்...