வெள்ளகோவில் அருகே மொபட் மீது வேன் மோதி 2 பேர் பலி

வெள்ளகோவில்,ஜன.28:  வெள்ளகோவில் அருகே உள்ள பாப்பம்பாளையத்தை சேர்ந்த சிங்கார வேலன் (33). இவர் உறவினர் பாப்பம்பாளையத்தை சேர்ந்த சேமலை (50). நேற்று இருவரும் மொபட்டில் உப்பு பாளையம் ரோட்டில் இருந்து காடையூரான் வலசு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தனர். கோவை-கரூர் மெயின்ரோடு வந்து சேரும் போது காங்கயத்தில் இருந்து வெள்ளகோவில் நோக்கி வந்த வேன் மொபட் மீது மோதியது. இதில் மொபட்டை ஓட்டி வந்த  சிங்காரவேலன்   பலத்த சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சேமலை காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்  உயிரிழந்தார். இரும்பு திருடிய 4பேர் சிக்கினர்திருப்பூர், ஜன.28: திருப்பூர் மாநகரின் பல பகுதிகளில் பெண்கள் சிலர் சாக்குகளுடன் வந்து வீட்டின் முன்பு வைத்திருக்கும் பழைய இரும்பு பொருட்கள் மற்றும் சில விலை உயர்ந்த பொருட்களை திருடிச் செல்வதாக போலீசாருக்கு புகார் வந்தது. இந்நிலையில், நேற்று திருப்பூர் யூனியன் மில் ரோட்டில் உள்ள ஒரு கடைக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த பழைய இரும்பு பொருட்களை 4 பெண்கள் திருடிக்கொண்டு சென்றனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த 4 பெண்களையும் பிடித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், 4 பேரும் பலவஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது

Tags : van crashes ,Wellago ,
× RELATED மரத்தில் வேன் மோதி 12 பேர் காயம்