அவினாசிபாளையம் ஜெய் ராம் அகாடமி மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா

திருப்பூர்,ஜன.28: திருப்பூர் அவினாசிபாளையத்தில் உள்ள ஜெய்ராம் அகாடமி மெட்ரிக்குலேசன் பள்ளியில் முதலாமாண்டு விளையாட்டு விழா நடந்தது. பள்ளி தலைவர் தங்கராஜ் தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கினார். பள்ளி துணைத்தலைவர் முத்து அருண் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் யமுனாதேவி வரவேற்றார். விழாவில், போலீஸ் எஸ்.ஐ பழனியம்மாள் சிறப்புரையாற்றினார். இதையடுத்து மாணவ மாணவிகளுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தது. போட்டிகளில் பங்கேற்ற மாணவ மாணவிகள் தங்கள் விளையாட்டு திறனை வெளிப்படுத்தி அசத்தினர். பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியில் உடற்கல்வி ஆசிரியர் பிரபு கலையரசன் நன்றி தெரிவித்தார்.

Tags : Avinashipalayam Jai Auram Academy Matric School Sports Festival ,
× RELATED தொழிலாளி தூக்கில் தற்கொலை