×

கோடை சீசனுக்கு ரோஜா பூங்கா தயார் செய்யும் பணி மும்முரம்

ஊட்டி,ஜன.28: ஊட்டி ரோஜா பூங்காவில் கவாத்து பணிகள் நிறைவடைந்த நிலையில், ரோஜா செடிகளுக்கு தற்போது உரமிடும் பணிகளும், பராமரிப்பு பணிகளும் துரித கதியில் நடக்கிறது. ஆண்டு தோறும் கோடை சீசனான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஊட்டிக்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில், ரோஜா கண்காட்சி, மலர் கண்காட்சி, காய்கறி கண்காட்சி, பழக்கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சி ஆகியவை நடத்தப்படுகிறது. மே மாதம் முதல் வாரத்தில் ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி நடத்தப்படுகிறது. இதனை முன்னிட்டு ரோஜா செடிகள் அனைத்தும் கடந்த வாரம் கவாத்து செய்யப்பட்டது. தற்போது கவாத்து பணிகள் முடிந்த நிலையில், செடிகளை பராமரிக்கும் பணிகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது. இயற்கை உரம் இடுதல் மற்றும் செடிகளுக்கு தண்ணீர் தெளிக்கும் பணிகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது. சீசனுக்கு இரு மாதங்களே உள்ள நிலையில், ரோஜா பூங்கா மட்டுமின்றி நீலகிரியில் உள்ள அனைத்து பூங்காக்களிலும் பராமரிப்பு பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

Tags : rose garden ,
× RELATED ஊட்டியில் மலர் நாற்று உற்பத்தி தீவிரம்