×

ஐஸ் பர்க் பயிரிடுவதில் நீலகிரி விவசாயிகள் ஆர்வம்

ஊட்டி,ஜன.28: நீலகிரி மாவட்டத்தில் குறுகிய கால பயிர், அதே சமயம் விலை அதிகம் கிடைக்கும் பயிர்களில் ஒன்றான ஐஸ் பர்க் பயிரிடுவதில் தற்போது விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலைக் காய்கறி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலான விவசாயிகள் உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், பீன்ஸ், பூண்டு போன்ற காய்கறி சாகுபடியில் அதிகளவு ஈடுபடுகின்றனர். ஒரு சில பகுதிகளில் வெளி நாட்டு பயிர்களான சுக்கினி, ஐஸ்பெர்க், சைனா கேபேஜ், லிட்டியோஸ், புருக்கோலி போன்ற காய்கறிகள் சாகுபடி செய்வதில் பெரும்பாலான விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த வகையான காய்கறிகள் குறுகிய கால பயிர்கள்.
45 நாட்களிலேேய ஆறுவடை செய்ய முடியும். அதே சமயம் மற்ற காய்கறிகளை விட அதிக லாபமும் கிடைக்கிறது. சைனீஷ் உணவகள் மற்றும் சூப்புகளில் பயன்படுத்தப்படும், இவ்வகை பயிர்கள் தற்போது நீலகிரி மாவட்டத்தில் பயிரிடப்பட்டு, வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அதிகளவில் அனுப்பி வைக்கப்படுகிறது.

Tags : Nilgiris ,
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...