×

கீழ்பவானி வாய்க்காலில் முதல் சுற்று தண்ணீர் நிறுத்தம்

சத்தியமங்கலம், ஜன.28: பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனப்பகுதிகளில் உள்ள ஒற்றைப்படை மதகு பாசனப்பகுதிகளில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் புன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்குமாறு தமிழக முதல்வர் உத்தரவிட்டதை தொடர்ந்து கடந்த 9 ம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஜனவரி 9 முதல் ஏப்ரல் 30 ம் தேதி வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் 12 டிஎம்சி க்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் கடந்த 9ம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று இரவுடன் நிறுத்தப்பட்டது. 8 அல்லது 10 நாட்களில் 2ம் சுற்றுக்கு தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று மாலை 6 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 102.31 அடியாகவும், நீர் இருப்பு 30.5 டிஎம்சி யாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 389 கனஅடியாக உள்ளது. அணையிலிருந்து பவானி ஆற்றில் 500 கனஅடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 1400 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

Tags : round ,water stops ,river ,
× RELATED ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மின்டன்; 2வது சுற்றில் சிந்து