×

ஆசனூர் அருகே ஹெத்தையம்மன் கோயில் திருவிழா

சத்தியமங்கலம், ஜன. 28:    ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த மாவள்ளம், கோட்டாடை, தேவர்நத்தம், ஓசட்டி,  உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான படுகர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கிராமத்தில் விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும், குலதெய்வமான ஹெத்தையம்மன் கோயிலில் ஆண்டுதோறும் விழா கொண்டாடுவது வழக்கம்.  இதன்படி ஒசட்டி கிராமத்தில் உள்ள ஹெத்தையம்மன் கோயிலில் கணபதி ஹோமம், பூச்சொரிதல், நவகலச பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் விழா துவங்கியது. இதில் பங்கேற்ற படுகர் இன மக்கள் குடும்பத்துடன் பாரம்பரிய உடையணிந்து நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  நேற்று இரவு கோயிலின் முன் தீ மூட்டி தங்களது பாரம்பரிய நடனங்களை ஆடி மகிழ்ந்தனர். விழாவில் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் பகுதிகளில் இருந்து படுகர் இன மக்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கலந்து கொண்டனர். அதன்பின்னர் ஹெத்தையம்மனுக்கு படையலிட்ட பொங்கலை பிரசாதமாக வழங்கினர்.

Tags : Hettiyamman ,temple festival ,Asanur ,
× RELATED கமுதி கோயில் திருவிழாவில் உடலில் சேறு பூசி பக்தர்கள் நேர்த்திக்கடன்