×

கல்லட்டி நீர் வீழ்ச்சியில் மூழ்கிய வாலிபர்களின் உடல்களை தேடும் பணி தீவிரம்

ஊட்டி,ஜன.28:  ஊட்டி அருகேயுள்ள கல்லட்டி நீர் வீழ்ச்சியில் தவறி விழுந்த ஊட்டியை ேசர்ந்த வாலிபர்களின் உடலை தேடும் பணி இரண்டாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. ஊட்டியில் இருந்து மசினகுடி செல்லும் மலை பாதையில் பாதையில் 15 கொண்டை ஊசி வளைவில் கல்லட்டி சோதனை சாவடி உள்ளது. இங்கிருந்து சுமார் அரை கிலோ மீட்டார் தொலைவியல் கல்லட்டி நீர் வீழ்ச்சி உள்ளது.  ஊட்டியை சேர்ந்த ஜிப்சன், பரத், சுந்தர்ராஜ், இவரது சகோதரர் சாமுவேல், கணேசன் திருப்பூரை சேர்ந்த ஆனந்த், விஜயகுமார்  ஆகியோர் நேற்று முன்தினம் மதியம் கல்லட்டி நீர் வீழ்ச்சிக்கு சென்றுள்ளனர். நீர் வீழ்ச்சிக்கு சென்ற தண்ணீருக்குள் சென்று அங்குள்ள பாறை மீது ஏறியுள்ளார். அப்போது, பாறை வழுக்கியதில் சாமுவேல்(23) தண்ணீரில் விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற கணேசன் தண்ணீரில் குதித்துள்ளார். ஆனால், அவரும் தண்ணீரில் முழ்கியுள்ளார். நீச்சல் தெரியாத நிலையில், சேறும் சகதியுமான தண்ணீரில் அவர்களால் தப்பிக்க முடியவில்லை. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உடன் வந்த நண்பர்கள் உடனடியாக புதுமந்து போலீசார் மற்றும் ஊட்டி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இத்தகவலின் பேரில் புதுமந்து எஸ்ஐ., சிவகுமார் தலைமையில் போலீசார் மற்றும் ஊட்டி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீரில் முழ்கிய சாமுவேல், கணேசன் ஆகியோரின் உடல்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இருள் சூழ்ந்ததால் நேற்று முன்தினம் உடலை தேடும் பணியை கைவிட்டனர். பின் நேற்று காலை 8 மணி முதல் மீண்டும் அங்கு இருவரின் உடலை தேடும் பணியை மேற்கொண்டனர்.  தீயணைப்புத்துறையினர் மற்றும் நீச்சல் தெரிந்தவர்கள் என 10க்கும் மேற்பட்டோர் ஆற்றில் குதித்து தேடினர். ஆனால், நேற்று மாலை வரை உடல்கள் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து, ஸ்கூப்பா டைவிங் எனப்படும் தண்ணீரில் மூழ்கி தேடும் நீச்சல் வீரர்களை கொண்டு தேட முடிவு செய்தனர். இதற்காக, குன்னூர் வெலிங்டன் மற்றும் மாநில பேரிடர் மீட்டு குழுவினர் உதவியை நாட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.கல்லட்டி நீர்வீழ்ச்சியில் மூழ்கி உயிரிழந்த இரு வாலிபர்களது உடல்களை மீட்க முடியாத நிலையில் கன்னியாகுமரியை சேர்ந்த 11 தீயணைப்பு வீரர்கள் ஊட்டி வர உள்ளனர். இன்று மீண்டும் நீர்வீழ்ச்சியில் மூழ்கியவர்களின் உடல்களை தேடும் பணி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : men ,Kallatti ,
× RELATED இலுப்பூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்