×

கோவை பி.பி.ஜி. கல்லூரியில் செவிலியர்கள் விளக்கேற்றும் நிகழ்ச்சி

கோவை, ஜன. 28:  கோவை பி.பி.ஜி. செவிலியர் கல்லூரியின் 23வது விளகேற்றும் நிகழ்ச்சி சரவணம்பட்டியில் உள்ள பி.பி.ஜி. தொழில்நுட்ப கல்லூரியில் நடந்தது. இதில், பி.பி.ஜி. கல்லூரி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் தங்கவேலு தலைமை வகித்தார். தாளாளர் சாந்தி தங்கவேலு, செயலாளர் பூபாலா, அக்ஷய தங்கவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு விருந்தினராக கோவை விமானப்படை நிர்வாக கல்லூரி கமாண்டர் மேனன், ஜெயஸ்ரீ மேனன் ஆகியோர் பங்கேற்றனர்.  இந்நிகழ்ச்சியில், 2019-20ம் கல்வியாண்டில் சேர்ந்த முதலாமாண்டு மாணவிகள், பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு முடிந்து பணிக்கு செல்ல உள்ள மாணவிகள், செவிலியர் துறையின் முன்னோடியான லாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரை நினைவு கூறும் வகையில் 120 மாணவிகள் விளகேற்றி உறுதி மொழியேற்றனர். நிகழ்ச்சியில், ஏர் கமாண்டர் மேனன் பேசுகையில், “செவிலியர்கள் தங்களின் பணியை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்ய வேண்டும். பெற்றோரை மதிக்க வேண்டும். பணியில் திறமையாக செயல்பட வேண்டும். தொடர் முயற்சிகள் வெற்றியை அளிக்கும்” என்றார். இதில், பி.பி.ஜி. செவிலியர் கல்லூரியின் முதல்வர் முத்துலட்சுமி, ஜெயபாரதி, மாணவ, மாணவிகள், அவர்களின் பெற்றோர் என பலர் கலந்துகொண்டனர்.

Tags : Coimbatore PPG Nurses ,
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்