பவானிசாகர் அருகே நால்ரோடு பகுதியில் அடிக்கடி விபத்து

சத்தியமங்கலம், ஜன. 28:  பவானிசாகர் அருகே நால்ரோடு பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால், அப்பகுதியில் உள்ள 4 சாலைகள் சந்திப்பில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 சத்தியமங்கலத்திலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் பவானிசாகர் அருகே உள்ள நால்ரோடு பகுதியில் புஞ்சைபுளியம்பட்டியிலிருந்து பவானிசாகர் செல்லும் சாலை சந்திப்பு உள்ளது. 4 சாலைகள் சந்திக்கும் இப்பகுதியில் நால்ரோடு கிராமம் அமைந்துள்ளது. இதில் சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. இதேபோல் புஞ்சைபுளியம்பட்டியிலிருந்து பவானிசாகர் வழியாக பண்ணாரி செல்லும் சாலையில் வாகனப்போக்குவரத்து அதிகரித்துள்ளதால், நால்ரோடு பகுதியில் உள்ள 4 ரோடுகள் சந்திக்கும் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. நேற்று சத்தியமங்கலத்திலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற சரக்கு லாரி நால்ரோடு அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதியாக உள்ளதால் நான்கு ரோடுகள் சந்திக்குமிடத்தில் சாலையை மேம்படுத்தி ரவுண்டானா அமைக்க நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertising
Advertising

Related Stories: