×

ஓட்டு வீட்டில் செயல்படும் ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் கட்ட கோரிக்கை

மொடக்குறிச்சி, ஜன. 28:   நஞ்சை கொளாநல்லியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலை புறம்போக்கு இடத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 கொடுமுடி ஒன்றியத்துக்குட்பட்ட நஞ்சை கொளாநல்லியில் கடந்த பல ஆண்டுகளாக ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. நஞ்சை கொளாநல்லி, சத்திரம், சத்திரப்பட்டி, கருங்கரடு, காரணாம்பாளையம், கருவேலம்பாளையம் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த 750 குடும்ப அட்டைகள் ரேஷன் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் இங்கு செயல்பட்டு வரும் ரேஷன் கடை சாலை புறம்போக்கில் உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் ஓட்டு வீட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் இருப்பு வைக்கப்படுகின்ற அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற மூட்டைகள் மழைக்காலங்களில் ஓட்டு வீட்டில் ஒழுகும் மழைநீரால் பொருட்கள் நனைந்து சேதமடைகிறது. இதனால் ரேஷன் பொருட்கள் வாங்கும் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர். எனவே ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : building ,ration shop ,driveway ,
× RELATED கொல்கத்தாவில் 5 மாடி கட்டிடம் இடிந்து 9 பேர் பலி