×

தர்மபுரியில் நூல்கள் அறிமுக விழா

தர்மபுரி, ஜன.28:  தர்மபுரியில் 20 நூல்கள் அறிமுக விழா நடந்தது. தர்மபுரியில் தகடூர் புத்தகப்பேரவை சார்பில், 20 நூல்கள் அறிமுக விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நீதிபதி ஆனந்தன் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ‘அரசியல் சாசனத்தின் அடிப்படைகளை நாம் பாதுகாக்க வேண்டும். இலக்கிய வாசிப்பே நம்மை முழு மனிதர்களாக உருவாக்கும். சிறந்த நீதிபதிகளாக போற்றப்படும் வி.ஆர்.கிருஷ்ணய்யா, சந்துரு, ஹரிபரந்தாமன் உள்ளிட்டோரின் தீர்ப்புகளுக்கு பின்னால், ஆழ்ந்த இலக்கிய வாசிப்புகள் உள்ளன. சமுதாயம் மனிதர்களை உருவாக்குகிறது. அந்த மனிதர்களை இலக்கியமே நல்வழிப்படுத்தும்,’ என்றார். நிகழ்ச்சியில், தர்மபுரி முன்னாள் எம்பி மருத்துவர் செந்தில், ஆசிரியர்கள் தங்கமணி, கவிதா, ஓய்வு பெற்ற கல்வி அலுவலர் ராஜசேகரன், பேராசிரியர் சஞ்சீவராயன், நூலகர் சரவணன், சுகந்தி பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை இலக்கிய ஆர்வலர் சேட்டு ஒருங்கிணைத்தார்.

Tags : Introduction ,Dharmapuri ,
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...