×

வேலூர் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி

வேலூர், ஜன.28: வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பனிப்பொழிவு குறைந்து காணப்பட்டது. நள்ளிரவில் தொடங்கும் பனிப்பொழிவு காலை 8 மணிக்கு மேலும் நீடித்தது. இதனால் வேலைக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். நெடுஞ்சாலைகளில் பனிமூட்டம் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். கடந்த வாரம் வாலாஜா டோல்கேட் அருகே தேசிய நெடுஞ்சாலையில் படர்ந்த பனிமூட்டத்தால் பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி மீது கார் மோதியது, தொடர்ந்து சரக்குவேன், மினிபஸ் உட்பட 9 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில், 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை வழக்கத்தைவிடவும் பனிமூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஊர்ந்து சென்றன. தொலைதூரத்தில் இருந்து வந்த கனரக வாகன ஓட்டிகள் வாலாஜா டோல்கேட், ஆற்காடு, விஷாரம், பொய்கை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான வாகன நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்தி, ஓய்வெடுத்து பின்னர் சென்றனர். வேலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவினால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாயினர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து குறைந்து காணப்பட்டன.

Tags : Motorists ,Vellore district ,
× RELATED திருப்பதிசாரம் டோல்கேட்டில் கட்டணம் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி