திருவண்ணாமலையில் கோயில் மீது லாரி ேமாதி முன்பகுதி சேதம்

திருவண்ணாமலை, ஜன.28: திருவண்ணாமலையில் சரக்கு லாரி கோயில் மீது மோதிய விபத்தில் கோயிலின் முன்பகுதி சேதமடைந்தது. திருவண்ணாமலையில் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தையொட்டி உள்ள தண்டராம்பட்டு சாலையோரம் உள்ள கோயில் முன்பகுதியில் நேற்று காலை மணலூர்பேட்டை சாலை மார்கமாக இருந்து திருவண்ணாமலை நோக்கி சரக்கு லாரி ஒன்று வந்தது. அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த நபர் மீது எதிர்பாரத விதமாக மோதியது. இதனை சற்றும் எதிர்பார்க்காத லாரி டிரைவர் லாரியை கட்டுப்படுத்த முடியாமல் அருகில் இருந்த கோயில் மீது மோதி நிறுத்தினார். பைக்கில் வந்த நபருக்கு படுகாம் ஏற்பட்டு, பைக் லாரியின் அடியில் சிக்கியது.

மேலும் கோயில் மீது மோதியதால் கோயில் முன்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஷெட் மற்றும் கோயில் சுவர் உடைந்து சேதமடைந்தது. இந்த விபத்தினை கண்ட பொதுமக்கள் ஓடிவந்து படுகாயம் அடைந்த நபரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் தப்பியோடிய லாரி டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Thiruvannamalai ,
× RELATED நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் எடைமேடை பழுதடைந்து சேதம்