×

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலம் முன் சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை, ஜன.27: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு கிராம சுகாதர செவிலியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு கிராம சுகாதா செவிலியர்கள் சங்கத்தின் சார்பில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் போது, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கடலூர், திருப்பத்தூர், திருவாரூர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் கிராம செவிலியர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள தற்காலிக பணியிட நீக்கத்தை திருப்ப பெற வேண்டும்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி திட்டத்தில் உள்ள மென்பொருள் குளறுபடிகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். மகப்பேறு இறப்புக்கு கிராம சுகாதார செவிலியரை மட்டும் பொறுப்பாக்குவதை தவிர்க்க வேண்டும், கிராம சுகாதார செவிலியர்கள் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து கோரிக்கை மனுவினை செவிலியர்கள் கலெக்டரிடம் அனித்தனர். இதில் சங்க நிர்வாகிகள் கவுசல்யா, விஜயகுமாரி, கலா, செல்வி, புனிதா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ‘எங்களின் கோரிக்கைகள் குறித்து கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம். எங்களது கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் குறித்து சங்க கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Tags : Health Nurses Association ,Office ,Thiruvannamalai Collector ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...