செய்யாறு அடுத்த சித்தாத்தூர் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடை அகற்ற வேண்டும்

செய்யாறு, ஜன.28: செய்யாறு அடுத்த சித்தாத்தூர் கிராமத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கிராம சபா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செய்யாறு அடுத்த சித்தாத்தூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அறிவழகி குமார் தலைமையில் கிராம சபா கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ராமலிங்கம், வெம்பாக்கம் ஒன்றிய குழு துணை தலைவர் நாகம்மாள், ஒன்றிய குழு உறுப்பினர் வசந்தராஜ், வெம்பாக்கம் ஒன்றிய பற்றாளர் எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பழுதடைந்துள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியை கான்கிரீட் கட்டிடமாக கட்டுவது, சித்தாத்தூர்- பாண்டியம்பாக்கம் செல்லும் சாலையில் மதகு கால்வாய் மீதுள்ள தரைப்பாலம் மேம்பாலமாக அமைக்க கோருவது, செய்யாறு தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்க கோருவது, சித்தாத்தூரில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை அகற்ற நடவடிக்கை எடுப்பது,
ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியிலுள்ள பழுதடைந்த அங்கன்வாடி கட்டிடத்தை புதுப்பித்தல், கல்குவாரிகள் நிரந்தரமாக மூட வலியுறுத்துவது, இரண்டு மாதங்களாக வராமலிருக்கும் ஆற்று குடிநீர் நிரந்தரமாக கிடைக்க வழிவகை செய்தல், ஊராட்சியில் 6 இடங்களில் உயர் கோபுர மின் விளக்கு அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : task shop ,village ,Siddathur ,
× RELATED ராஜாக்கமங்கலம் அருகே புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு