2 பெண் குழந்தைகளுடன் கருத்தடை செய்து கொண்ட தம்பதிக்கு பரிசு

கலசபாக்கம், ஜன.28: 2 பெண் குழந்தைகளுடன் கருத்தடை செய்து கொண்ட தம்பதிகளுக்கு எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் பரிசு வழங்கி பாராட்டினார்.
கலசபாக்கம் அடுத்த மேல்வில்வராயநல்லூர் கிராமத்தில் பெண் குழந்தைகளை போற்றுவோம், பாதுகாப்போம், கிராம சபா கூட்டம், தேசிய பெண்கள் தினம் என முப்பெரும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் நிலவழகி பொய்யாெமாழி தலைமை தாங்கினார். டாக்டர் அருள் முன்னிலை வகித்தார்.

விழாவில், எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு, 2 பெண் குழந்தைகளை பெற்று கருத்தடை செய்து கொண்ட தம்பதிகளுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசினார். முன்னதாக, பெண்கள் பாதுகாப்பு குறித்து எம்எல்ஏ தலைமையில் உறுதிமொழி ஏற்றனர். மேலும், குடியரசு தினவிழாவை முன்னிட்டு கலசபாக்கம் ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மேலாரணி அரசு பள்ளியில் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் தேசிய கொடியேற்றி வைத்து மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

Tags : girls ,
× RELATED விருத்தாசலம் அருகே காதல் ஜோடிக்கு திருமணம்