×

பாரதி மெட்ரிக் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா

திருவள்ளூர், ஜன. 28: திருவள்ளூர் ராஜாஜிபுரம் பாரதி மெட்ரிக் பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. இதில், பள்ளி தாளாளர் சீ.பார்த்தசாரதி தலைமை தாங்கினார். செயலாளர் பா.ராஜாராமன் முன்னிலை வைத்தார். முதல்வர் பா.சுமதி அனைவரையும் வரவேற்றார். விழாவில் திருமுல்லைவாயல் எக்ஸெல் மெட்ரிக் பள்ளி தாளாளர் எஸ்.ஏ.பாலகிருஷ்ணன், பள்ளிப்பட்டு சாய்ஸ்ரீ மெட்ரிக் பள்ளி தாளாளர் டிஎஸ்எம்.குருமூர்த்தி, ஆவடி நபி கிரஸண்ட் குரூப் பள்ளி நிர்வாகி கே.குலாப் உசேன், வேப்பம்பட்டு ஞானபானு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் கே.எம். ராதா ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்திப் பேசினார்.
இதில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Tags : Annual Sports Festival ,Bharathi Matric School ,
× RELATED பரமக்குடியில் விளையாட்டு விழா