×

கும்மிடிப்பூண்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

கும்மிடிப்பூண்டி, ஜன. 28: எய்ட் இந்தியா நிறுவனம் மற்றும் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஹைடெக் கார்பன் நிறுவனம் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கும்மிடிப்பூண்டியில் நடத்தியது. இந்த பேரணிக்கு எய்ட் இந்தியா நிறுவன மேலாளர் திலீப் தலைமை தாங்கினார். மேற்பார்வையாளர் அருள் வரவேற்றார். பேரணியை கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி ரமேஷ் துவக்கி வைத்தார். இன்ஸ்பெக்டர் சக்திவேல், எஸ்ஐ சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர்.

இதில், மாணவ - மாணவிகள் கலந்துகொண்டனர். பஸ் நிலையத்தில் இருந்து துவங்கிய பேரணி ரெட்டம்பேடு சாலையில் முடிவடைந்தது. இதில் பங்கேற்ற மாணவர்கள், ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் டிஎஸ்பி ரமேஷ் பேசும்போது, “சாலை விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்புகளில் 80 சதவீதம் தலைகவசம் அணியாததால்தான் நடக்கிறது. சாலை விதிகளை அனைவரும் மதித்து நடக்க வேண்டும். பைக்கில் செல்பவர்கள் மட்டுமின்றி பின்னால் உட்காருகின்றவர்களும் தலைகவசம் அணிய வேண்டும்’’ என்றார்.

Tags :
× RELATED வாக்குப்பதிவுக்கு 3 நாட்களே உள்ள...