81 லட்சத்தில் திருமுக்கூடல் மேம்பாலத்தில் சாலை சீரமைக்கும் பணி துவக்கம்

காஞ்சிபுரம், ஜன.28: திருமுக்கூடல் மேம்பாலத்தில் 81 லட்சம் மதிப்பில் சாலை சீரமைக்கும் பணி துவங்கப்பட்டது. உத்திரமேரூர் அடுத்த திருமுக்கூடல் மேம்பால சாலை மற்றும் ரவுண்டானா பகுதியில், அதிகளவில் கனரக வாகனங்கள் செல்வதால், மிகவும் சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்று ஆனது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.
அதன்பேரில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி 45 லட்சம், எம்பி  மேம்பாட்டு நிதி ₹36 லட்சம் என மொத்தம் 81 லட்சத்தில் திருமுக்கூடல் பால சாலை மற்றும் ரவுண்டானா ஆகியவை சீரமைக்கும் பணி நேற்று துவங்கியது.

காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, எம்பி ஜி.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு சாலை அமைக்கும் பணியின் பூமி பூஜையை துவங்கி வைத்தனர். இதில், சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட அலுவலர் கோவிந்தராஜன், நிர்வாகி நடராஜன், ஊராட்சி செயலர்கள் உதயகுமார், எஸ்.ஆர்.வெங்கடேசன், ஞானசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : bridge ,Thirumukkudal ,
× RELATED திருச்செங்கோட்டில் மலைப்பாதை சீரமைப்பு பணியை எம்எல்ஏ ஆய்வு