அங்கன்வாடி பணியாளர்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்த பயிற்சி

ஸ்ரீபெரும்புதூர், ஜன.28: உணவு பாதுகாப்பு துறை சார்பில், அங்கன்வாடி பணியாளர்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்த பயிற்சி முகாம் ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. ஸ்ரீபெரும்புதூர் உணவு பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகர் தலைமை வகித்தார். ஸ்ரீபெரும்புதூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கோமதி முன்னிலை வகித்தார். பெரும்புதூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜார்ஜ் கலந்துகொண்டார்.முகாமில், பரிஷா ஆய்வகத்தை சேர்ந்த பயிற்சியாளர் திவ்யா கலந்து கொண்டு, உணவு கலப்படத்தை கண்டறிவது மற்றும் கையாள்வது குறித்து அங்கன்வாடி பணியாளர்களுக்கு  பயிற்சி அளித்தார். இதில், பெரும்புதூர் வட்டார அங்கன்வாடி பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Tags : Anganwadi ,
× RELATED கலெக்டர் அலுவலக வளாகத்தில்...