பங்காரு அடிகளார் பிறந்தநாளை முன்னிட்டு 32 அணிகள் பங்கேற்கும் 20-20 கிரிக்கெட் போட்டி

மதுராந்தகம், ஜன. 28: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் பிறந்தநாளை முன்னிட்டு, 32 அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி துவங்கியது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி 2 மாதங்கள் நடைபெற உள்ளது. அதில், 32 அணிகள் பங்கேற்கும் மிகப்பெரிய கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் நேற்று முன்தினம், ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடந்தது.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க தலைவர் கோ.ப.அன்பழகன் தலைமை தாங்கினார். ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி முதல்வர் மோமன் சிங் வரவேற்றார். செய்யூர்  வட்டாட்சியர் சுந்தர் கலந்துகொண்டு விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்துடன், தொடங்கிய இந்த விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட விளையாட்டு வீரர்கள், மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகளுடன் இணைந்து பாரத தேசத்துக்கு மரியாதை செலுத்தினர். இந்த போட்டியில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,  விழுப்புரம் மற்றும் புதுச்சேரி உள்பட 32 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. 2 மாதங்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த போட்டியின் முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றுகளும் வழங்கப்படும்.

Tags : cricket tournament ,teams ,birthday ,
× RELATED 13-வது ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் போட்டி தொடருக்கான அட்டவணை வெளியீடு