வாராந்திர குறைதீர் நாள் கூட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

காஞ்சிபுரம், ஜன.28: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் பொன்னையா தலைமையில் நேற்று நடந்தது.
இதில் முதியோர், மாற்றுத் திறனாளிகள், விதவை, கல்வி, திருமண உதவித்தொகைகள், வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடுகள், குடும்ப அட்டை, பட்டா மாற்றம் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 197 மனுக்கள் பெறப்பட்டன. தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 4 பேருக்கு மருத்துவ சான்றுடைய அடையாள அட்டைகளை மாவட்ட கலெக்டர் பொன்னையா வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, சப் கலெக்டர் சரவணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாராயணன்,  மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரவிச்சந்திரன், உதவி ஆணையர் ஜீவா, மாவட்ட வழங்கல் அலுவலர் கஸ்தூரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED உடைந்து நாசமான சோலார் மின் தகடு