போதை மாத்திரை விற்ற கணவன், மனைவி கைது

ஆலந்தூர்: ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் 3வது தெருவை சேர்ந்த வசந்தி என்பவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது, அவருடைய கணவர் சுகுமார் மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த ஜீவரத்தினம் ஆகியோர் போதை  மாத்திரை விற்பனை செய்வது தெரிந்தது. அவர்களிடம் இருந்து 70 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்தனர். இவர்களுக்கு போதை மாத்திரைகளை சப்ளை செய்த அப்பகுதியை சேர்ந்த பவுல்ராஜ், இளங்கோ மற்றும் 2 சிறார்களையும்  போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 50 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். வசந்தியின் மகன் அருண்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED மனைவிக்கு கத்திக்குத்து கணவன் கைது