ராஜிவ்காந்தி சாலையில் இருந்து அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

துரைப்பாக்கம்: சென்னை அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து சிறுசேரி வரை சுமார் 22 கி.மீ தூரத்துக்கு ராஜிவ்காந்தி சாலை அமைந்துள்ளது. இந்த சாலையின் பராமரிப்பு பணிகள் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு  நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிறுவனம் பெருங்குடி, துரைப்பாக்கம் 200 அடி சாலை, சோழிங்கநல்லூர் கலைஞர் கருணாநிதி சாலை, மேடவாக்கம் சாலை, நாவலூர் ஆகிய இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைத்து, வாகனங்களுக்கு சுங்கவரி வசூல் செய்து வருகிறது.மேற்கண்ட சுங்கச்சாவடி பகுதிகளில் வாகனங்களின் வேகத்தை குறைக்கும் வகையில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டு, இடது மற்றும் வலதுபுறம் வாகனங்கள் திரும்பும் வகையில் வழிவகை செய்யப்பட்டு இருந்தது.

 இந்நிலையில், கடந்த  வருடம் சீன பிரதமர் மாமல்லபுரம் வருகையை முன்னிட்டு, ராஜிவ்காந்தி சாலையில் உள்ள அனைத்து வேகத்தடைகளும் அகற்றப்பட்டன.அதன்பிறகு அங்கு மீண்டும் வேகத்தடைகள் அமைக்கப்படவில்லை. தற்போது, வேகத்தடை  இல்லாததால், அதி வேகமாக செல்லும் வாகனங்களால் அப்பகுதிகளில் நாள்தோறும் வாகன விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. எனவே, பெரிய அளவில் விபத்து ஏற்படுவதற்கு முன், சுங்கச்சாவடி பகுதிகளில் மீண்டும் வேகத்தடை அமைக்க உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: