குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து சேரன்மகாதேவியில் பொதுக்கூட்டம்

வீரவநல்லூர், ஜன. 24:   சேரன்மகாதேவி பக்கீர் பாவா பள்ளிவாசல் திடலில் ஊர் மக்கள், அனைத்து ஜமாஅத், அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு சார்பில் நடந்த இக்கூட்டத்திற்கு சேரன்மகாதேவி ஜமாஅத் தலைவர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். செயலாளர் புகாரி, துணை செயலாளர் அப்பாஸ், பொருளாளர் அய்யூப்கான் முன்னிலை வகித்தனர். பள்ளிவாசல் இமாம் குலாம் மைதீன் கிராஅத் ஓதி கூட்டத்தை துவக்கிவைத்தார். இமாம் மீரான் கனி காசிப் வரவேற்றார்.

எஸ்டிபிஐ மாவட்ட பொதுச்செயலாளர் கோட்டூர் பீர்மஸ்தான் ஒருங்கிணைத்தார். எஸ்டிபிஐ மாநில பொதுச்செயலாளர் அப்துல்ஹமீது, மமக மாநில பொதுச் செயலாளர் அப்துல்சமது, மமமுக நிறுவனர் பாளை ரபீக், ஏகத்துவ முஸ்லீம் ஜமாஅத் மாநில தலைவர் பக்கீர் முகம்மது அல்தாபி, அய்யாவழி பாலமுருகன், விமன்ஸ் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவர் மும்தாஜ் ஆலிமா, மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் பாஸ்கரன் பேசினர்.  கூட்டத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் கனி, மாவட்ட செயலாளர்கள் முஸ்தபா, அலாவுதீன், பாப்புலர் பிரண்ட் மாவட்ட தலைவர் முகமது அலி, தமுமுக மாவட்டத் தலைவர் ரசூல் மைதீன், விசிக மாநில இளம்சிறுத்தைகள் பாசறை செயலாளர் கார்த்திக், ஏகத்துவ மாவட்ட தலைவர் இப்ராஹிம், நாம் தமிழர் அம்பை தொகுதி செயலாளர் செல்வம் மற்றும் ஜமாஅத்தார்கள், ஊர் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஜமாஅத் துணை தலைவர் முகமது அலி நன்றி கூறினார்.

Related Stories: