சாலை பாதுகாப்பு வார விழா பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு போட்டிகள்

தூத்துக்குடி, ஜன.24:தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு வட்டார போக்குவரத்து துறை சார்பில் பள்ளி மாணவியருக்கான விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டன. தூத்துக்குடி வட்டார போக்குவரத்து துறை சார்பில் 31வது சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளியில் பள்ளி மாணவ மாணவியருக்கான பேச்சு, ஓவிய போட்டிகள் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சுலோகன்கள் எழுதும் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளை வட்டார போக்குவரத்து அலுவலர் மன்னர்மன்னன் துவக்கி வைத்தார். 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதில் வெற்றி பெற்றவர்களை நடுவர்கள் தேர்வு செய்தனர். சுலோகன்கள் எழுதும் போட்டியில் மாணவி சுகன்யாசுந்தரி முதல்பரிசும், குருஸ்வாதி 2ம் பரிசும், வைஷ்ணவி 3ம் பரிசும் பெற்றனர். பேச்சுபோட்டியில் மாணவி பத்மா முதல் பரிசும், ஜனனி 2ம் பரிசும், மாலதி 3ம் பரிசும் பெற்றனர். ஓவியம் போட்டியில் மாணவி சமிக்ஷா முதல்பரிசும், சுஹாசினி 2ம் பரிசும், தேவி 3ம் பரிசும் பெற்றனர்.ெதாடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் எஸ்பி அருண்பாலகோபாலன் தலைமை வகித்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். டவுன் டிஎஸ்பி பிரகாஷ் போக்குவரத்து விழிப்புணர்வும், பாதுகாப்பும் குறித்து பேசினார். தலைமையாசிரியர் சாந்தினி கவுசல், எம்பவர் அமைப்பு செயல்இயக்குநர் சங்கர் முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை தூத்துக்குடி வட்டார போக்குவரத்து துறையினர் செய்திருந்தனர். மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேஷ் நன்றி கூறினார்.

Related Stories: