×

தூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, ஜன.24:எஸ்சி, எஸ்டி, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க கோரி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  இந்திய மாணவர் சங்கம் சார்பில் அதன் மாவட்ட தலைவர் நாத், மாவட்ட செயலாளர் ஜாய்சன் தலைமையில் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அவர்கள் கலெக்ரிடம் அளித்த மனுவில்,தனியார் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் எஸ்சி, எஸ்டி, மாணவர்களுக்கு அரசாணை 92ன் படி அரசு கல்வி உதவிதொகை வழங்கி இலவசமாக படிக்க உத்தரவிட்டுள்ளது. தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி ஆரம்பத்தில் 4 வருட பொறியியல் படிப்பு இலவசம் என்று கூறிவிட்டு தற்போது மாணவர்களிடம் ரூ.30 ஆயிரம் கட்டணம் செலுத்துமாறு கூறியுள்ளனர்.எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மாணவர்கள் தொடர்ந்து கட்டணம் செலுத்தாமல் கல்லூரியில் படிக்க வழிவகை செய்ய வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர். இதில் மாவட்ட துணை செயலாளர் மாரி செல்வம், மாவட்ட குழு உறுப்பினர் சதிஷ் மற்றும் சிவராமன், செல்வின், ராஜேஷ், ஜெயபிரதாப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போராட்டம் மாலை வரை நீடித்தது. அதிகாரிகள் கல்லூரி நிர்வாகத்திடம் பேசுவதாக தெரிவித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Tags : Indian ,students union ,Thoothukudi ,
× RELATED மாணவர் சங்க தேர்தலில் ஜேஎன்யூ...