நாசரேத் அருகே நெய்விளை இம்மானுவேல் ஆலய பிரதிஷ்டை விழா தொடக்கம்

நாசரேத், ஜன.24:நெய்விளை தூய இம்மானுவேல் ஆலய பிரதிஷ்டை விழாவில் வருகிற 27ம்தேதி அசனவிழா நடக்கிறது.நாசரேத் அருகேயுள்ள பிரகாசபுரம் சேகரம் நெய்விளை சபை தூய இம்மானுவேல் ஆலய 91வது பிரதிஷ்டை விழா கடந்த 19ம்தேதி தொடங்கி நடந்து வருகிறது. 22ம்தேதி முதல் 24ம்தேதி வரை 3 நாட்கள் ஆலய வளாகத்தில் உயிர்மீட்சிக் கூட்டங்கள் நடக்கிறது. கன்னியாகுமரி இயேசுவே தெய்வம் ஊழிய நிறுவனர் ராஜதாஸ் சிறப்புசெய்தி கொடுக்கிறார். நாளை (25ம்தேதி) காலை 9.30 மணிக்கு விற்பனை விழா நடக்கிறது. இரவு 6.30 மணிக்கு ஆயத்த ஆராதனை, பரி.ஞானஸ்நானம், பொருட்கள் பிரதிஷ்டை நடக்கிறது. வாழையடி சேகரகுரு ரூபன்மணிராஜ் சிறப்புசெய்தி கொடுக்கிறார். 26ம்தேதி அதிகாலை 3.30 மணிக்கு பண்டிகை ஆராதனை, பரி.நற்கருணைஆராதனை நடக்கிறது. கே.வி.கே.நகர் சேகர தலைவர் கிளாட்சன் சிறப்புசெய்தி கொடுக்கிறார். தொடர்ந்து 74வது வாலிபர் பண்டிகை நடக்கிறது. காலை 8.30 மணிக்கு வேதாகமத் தேர்வு, 10 மணிக்கு பண்டிகை ஆராதனை, பொருள் காணிக்கை, கவர் படைப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

 திருமண்டல வாலிபர் சங்க காரியதரிசி ஜாண் சாமுவேல் சிறப்புசெய்தி கொடுக்கிறார். இரவு 7 மணிக்கு பாடகர் ஞாயிறு நடக்கிறது. கருங்கடல் சேகரதலைவர் சாமுவேல் ரவிராஜ் சிறப்புசெய்தி கொடுக்கிறார். 27ம்தேதி அதிகாலை 3.30 மணிக்கு அசனஆயத்த ஆராதனை, பரி.நற்கருணைஆராதனை நடக்கிறது. மூக்குப்பீறி சேகரகுரு கிங்ஸ்லி ஜாண் சிறப்புசெய்தி கொடுக்கிறார். மாலை 4 மணிக்கு அசனவிழா நடக்கிறது. 28ம்தேதி காலை 9 மணிமுதல் மதியம் 1 மணிவரை பள்ளி விளையாட்டு போட்டிகளும், காலை 11 மணிக்கு அசனத்தில் உபயோகிக்கப்பட்டபொருட்கள் ஏலம் விடுதலும் இரவு 7 மணிக்கு பள்ளி ஆண்டுவிழாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை சேகரகுரு ஜெபவீரன் ஜாண், சபை ஊழியர் சாலொமோன்ராஜ் மற்றும் நெய்விளை சபையார் செய்துள்ளனர்.

Related Stories: