×

மூத்த குடிமக்கள்,பென்சனர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடுத் திட்டத்தை உறுதிப்படுத்திட வலியுறுத்தல்

அவிநாசி,ஜன.24: அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு அவசர மாநிலப் பேரவைக் கூட்டம் அவிநாசியில் மாநிலத்தலைவர்  ராஜண்ணன் தலைமையில் நடைபெற்றது. பாலகிருஷ்ணன் வரவேற்றார். மாநில நிர்வாகிகள் சிதம்பரம்,ராமசாமி சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மத்திய அரசுபோல் மருத்துவப்படி ரூ.1000 வழங்க வேண்டும். குறைந்தபட்ச பென்சன் ரூ.9000 வழங்க வேண்டும். அனைத்துப் பென்சனர்களுக்கும் மறுக்கப்பட்ட பொங்கல் பரிசை வழங்க வேண்டும். மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்களுக்கு காசில்லா மருத்துவ காப்பீடுத் திட்டம் என்பதை உறுதிப்படுத்திட வேண்டும். பேரூராட்சி உள்ளிட்ட அனைத்துத் துறையினருக்கும் குடும்ப நல நிதி,
மருத்துவக் காப்பீடு உட்பட அனைத்துப் பயன்களிலும் சமநீதி வழங்க வேண்டும். மத்திய அரசைப் போல் 20 ஆண்டு பணிக்கு முழு பென்சன் வழங்கிடவேண்டும். மத்திய அரசு பென்சனர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணப்பயனை தமிழக அரசுப் பென்சனர்களுக்கும் வழங்க வேண்டும். பென்சனர் குடும்பப் பாதுகாப்பு நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : pensioners ,senior citizens ,
× RELATED பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...