தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திருப்பூர், ஜன.24: திருப்பூர் மாநகர பகுதியில் தொடர் குற்றங்களில் ஈடுபட்ட  3 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். திருப்பூர் வடக்கு போலீசார் கடந்த நவம்பர் 27ம் தேதி நொய்யலாற்றை ஒட்டி மின்மயானம் உள்ள பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், திண்டுக்கல் பாறைப்பட்டியை சேர்ந்த மாயப்பன் (எ) மாயவன் (43),  பெரியாண்டவர் (25), நாகப்பட்டினம் வெளிபாளையத்தை சேர்ந்த அன்னக்கொடி (39) ஆகியோர் என்பது தெரிந்தது. அவர்களிடமிருந்து இரு சக்கர வாகனம், 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மூவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் அவர்கள் மூவரும் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த காரணத்தால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷ்னர் சஞ்சய் குமாருக்கு ஆய்வாளர் கணேசன் பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரை அடிப்படையில் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷ்னர் நேற்று உத்தரவிட்டார். உத்தவுக்கான நகல்கள் நேற்று கோவை மத்திய சிறையில் அவர்களிடம் அளிக்கப்பட்டன.

Related Stories: