×

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை

உடுமலை, ஜன. 24: அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது பற்றி கோயில் நிர்வாகத்தினர் மற்றும் வனத்துறையினர் அவ்வப்போது கண்காணித்து, சுற்றுலா பயணிகளை அனுமதிப்பதா?, தடை செய்வதா? என முடிவு செய்கின்றனர்.  கடந்த ஆண்டு பலமுறை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், தை அமாவாசையையொட்டி திருமூர்த்தி மலைக்கு பக்தர்கள் வரத் துவங்கினர். நேற்று அவர்கள் பஞ்சலிங்க அருவிக்கு செல்ல முயன்றனர். ஆனால் கருமேகங்கள் திரண்டு நின்றதால், கனமழை பெய்யக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் யாரையும் அருவிக்கு செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதுபற்றி பக்தர்கள் கூறுகையில், மழை எதுவும் பெய்யாத நிலையில், அருவியில் குளிக்கலாம் என ஆசையுடன் வந்தோம். ஆனால் கருமேகத்தை காரணம் காட்டி அருவிக்கு செல்ல தடை விதித்துவிட்டனர் என்றனர்.

Tags : Panjalinga Falls ,
× RELATED பஞ்சலிங்க அருவியில் தண்ணீர்