×

வேளாண் பல்கலைக்கழக பேருந்து பழுதால் கூடலூரில் போக்குவரத்து நெரிசல்

கூடலூர்,ஜன.24:கூடலூர் பழைய பேருந்து நிலையம் சிக்னல் பகுதியில் நேற்று காலையில் கோவையில் இருந்து வந்த கோவை வேளாண் பல்கலைக்கழக பேருந்தின் வலது முன்புற சக்கரம் பஞ்சரானதால் பேருந்து சாலையின் நடுவே நின்றது.
சக்கரத்தைக் கழற்றி மாற்றி பேருந்தை இயக்க சுமார் ஒரு மணி நேரம் ஆனது.  இந்த இடைவெளியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. பழைய பேருந்து நிலையம் சிக்னல் பகுதியில் ஊட்டி பகுதியிலிருந்து வரும் வாகனங்களால் ஏற்படும் விபத்துகள் காரணமாகவும், டயர்கள் பஞ்சர் ஆகுவதாலும்  அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இப்பகுதியில் சாலையின் நடுவே வைக்கப்பட்டுள்ள சிமெண்ட் தடுப்புகள் காரணமாக வாகனங்களை எதிர் திசையில் திருப்பி இயக்குவதில் சிக்கல் ஏற்படுகின்றது. பொதுமக்கள் சாலையின் மறுபுறம் கடந்து செல்வதிலும் சிக்கல்கள் உள்ளது. இப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து பிரச்னைகளை சீரமைக்க சிமெண்ட் தடுப்புகளை அகற்றி தற்காலிகத் தடுப்புகள் அமைக்க வேண்டும் என்று இப்பகுதி வியாபாரிகள், பொதுமக்கள்,வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags :
× RELATED சுற்றுலா பயணிகள் வருகை குறைய வாய்ப்பு