×

நேதாஜி பிறந்தநாள் விழா

பந்தலூர்,ஜன.24: பந்தலூர் பஜாரில் நேதாஜி சுபாஸ் சந்திரபோசின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது. பந்தலூர் பஜாரில் மகாத்மா காந்தி பொது சேவை மையம் மற்றும் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் நேதாஜியின் 123வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து, மையச் செயலாளர் சிவசுப்பிரமணியம், மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நவ்ஷாத் துணைத் தலைவர் சுரேஷ் மற்றும் மைய நிர்வாகிகள் பொன் கணேசன் தனிஸ்லாஸ் ஆண்டனி கண்ணன் அப்பாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நேதாஜியின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். பொதுமக்களும் நேதாஜியின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

Tags : Netaji ,birthday party ,
× RELATED மதுரை நேதாஜி சாலையில் உள்துறை...